தீயினால் அழிந்த வீட்டில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் கண்டெடுப்பு

லாஹாட் டத்தோ, ஏப்ரல் 10 :

இங்குள்ள சுங்கை பிலீஸ், கம்போங் தஞ்சோங் லேபியானில் உள்ள தீயினால் அழிக்கப்பட்ட இருவீடுகளில், ஒரு வீட்டில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

காலை 11 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், அபுபக்கர் அஷ் சித்திக் ராஜேஷ், 9, என்ற சிறுவனே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இன்று காலை 11.05 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக லாஹாட் டத்தோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் சும்சோவா ராஷிட் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இயந்திரங்கள் மற்றும் ஃபெல்டா சஹாபாட் துணை தீயணைப்புப் படையுடன் இணைந்து மொத்தமாக எட்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

“பிற்பகல் 12.43 மணியளவில் அந்த இடத்திற்கு வந்தபோது, ​​83 சதுர மீட்டர் மற்றும் 185 சதுர மீட்டர் அளவுள்ள இரண்டு நிரந்தரமற்ற வகையான வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது.

“தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டதும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அப்போது சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் ஒரு சிறுவனின் உடலைக்கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்ததாக ,” அவர் கூறினார்.

பின்னர் மேலதிக விசாரணைக்காக உயிரிழந்தவரின் சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், மீட்பு நடவடிக்கை பிற்பகல் 2.30 மணியளவில் நிறைவடைந்ததாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here