டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2022-2024 காலத்திற்கான பிகேஆர் தலைவர் பதவியை போட்டியின்றி தக்க வைத்துக் கொண்டார்.
பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறுகையில் அன்வார் மட்டுமே தலைவர் பதிவிக்கான வேட்பாளர் என்று அறிவித்தார்.
2018க்குப் பிறகு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்வார் போட்டியின்றி பதவி வெல்வது இது தொடர்ந்து இரண்டாவது முறையாகும்.
இதற்கிடையில், பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டி இன்றுவரை 18 வேட்பாளர்களை ஈர்த்துள்ளது. பிகேஆர் தகவல் தலைவர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் நேற்று இரவு தனது பெயரை சமர்ப்பித்துள்ளார்.
நான்கு பதவிகளுக்கான பட்டியலில் சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் மாநில பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி மற்றும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் மற்றும் மாநில பிகேஆர் தலைவர் அமினுடின் ஹாருன் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.