சரக்கு ரயிலுடன் மோதிய கார் – ஜோகூரில் சம்பவம்

ஜோகூர் பாரு, பாசீர் கூடாங்கில் உள்ள ஜோகூர் துறைமுகத்தின் நுழைவாயில் அருகே உள்ள ரயில் பாதையின் KM31 இல் ஒரு சரக்கு ரயில் கார் மீது மோதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

எவ்வாறாயினும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ஶ்ரீ ஆலம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சோஹைமி இஷாக் கூறினார்.

நடந்த சம்பவத்தில், பாசீர்  கூடாங் ஸ்டேஷனில் இருந்து ஜோகூர் போர்ட் ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் 31 வேகன்கள் (பெட்டிகள்) 32 வயதுடைய நபரால்  ரயில் என்ஜின் இழுத்துச் செல்லப்பட்டது.

இருப்பினும், ஜோகூர் துறைமுகத்தின் பிரதான வாயிலில் நுழையவிருந்த 41 வயதுடைய  நபர் ஒருவர் ஓட்டிச் சென்ற பெரோடுவா ஆக்ஸியா காரின் முன் இடது பக்கத்தில் ரயில் திடீரென மோதியது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், வரவிருக்கும் ரயிலைக் கவனிக்கத் தவறிய கார் ஓட்டுநரின் கவனக்குறைவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று சோஹைமி கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 79(2)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் எப்போதும் சாலை விதிகள் மற்றும் விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து அறிவுறுத்தல்களை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக peak hours என்று அவர் கூறினார்.

முன்னதாக, முகநூலில் வைரலான 40 வினாடிகள் கொண்ட வீடியோ பெரோடுவா ஆக்ஸியா கார் துறைமுகத்தின் பிரதான வாயிலை நோக்கி நகர்ந்து பின்னர் ரயிலில் மோதியதைக் காட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here