பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 17 :
வெள்ளிக்கிழமை முதல் இன்று அதிகாலை வரை, சாலை விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) மேற்கொண்ட நடவடிக்கையில், பல்வேறு குற்றங்களுக்காக மொத்தம் 253 சம்மன்கள் விதிக்கப்பட்டன.
தெருக்குண்டர்கள், வாகன கட்டமைப்பை மாற்றியமைத்தல் மற்றும் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 8 அதிகாரிகள் மற்றும் 70 உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கை நகர மையம், ஜாலான் கூச்சிங், ஜாலான் ராஜா லாவூட், அம்பாங்-கோலாலம்பூர் நெடுஞ்சாலை (AKLEH) மற்றும் டூத்தா -உலு கிள்ளான் விரைவுச்சாலை (DUKE) ஆகியவற்றைச் சுற்றி மேற்கொள்ளப்பட்டன.
கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை தலைவர், துணை ஆணையர் சரிபுடின் முகமட் சாலே கூறுகையில், இந்த நடவடிக்கையில், வாகன கட்டமைப்பை மாற்றியமைத்ததற்காக மொத்தம் 12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சாலே கூறினார்.
அவர் கூறுகையில், வாகன கட்டமைப்பை மாற்றியமைத்த குற்றத்திற்காக சாலை போக்குவரத்து சட்டம் (ஏபிஜே) 1987 பிரிவு 64 இன் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் சாலை போக்குவரத்து துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையால் நடவடிக்கை மற்றும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 21 முதல் 44 வயதுடைய 13 ஆண்களையும் நாங்கள் கைது செய்துள்ளோம்.
மேலும் “ஆபத்தான சூழ்நிலையில் சவாரி செய்த 16 முதல் 26 வயதுடைய மூன்று ஆண்கள் மற்றும் ஜிக்-ஜாக் ஸ்டண்ட், ராக்கெட்டுகள், சூப்பர்மேன் மற்றும் போட்டியில் ஈடுபட்டவர்கள் மற்றும் பொய்யான வாகன எண்களை பயன்படுத்திய ஒருவரும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தெருக் கும்பல் நடவடிக்கைகள், ஓட்டுநர்கள் செய்யும் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், JSPT வாரயிறுதியில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேம்படுத்தும் என்று அவர் விளக்கினார்.
“ஏதேனும் சந்தேகங்கள் அல்லது தகவல் உள்ளவர்கள் ஜாலான் துன் எச்.எஸ் லீ போக்குவரத்து காவல் நிலையத்தை 03-2071 9999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது கோலாலம்பூர் காவல்துறையின் ஹாட்லைன் 03-20260267/69 அல்லது அருகிலுள்ள எந்த நிலையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.