ஜாலான் சிரம்பான் -தம்பினில் மதரஸா மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம்

ரெம்பாவ், ஏப்ரல் 17 :

இங்குள்ள ஒரு மத்ரஸாவின் 18 மாணவர்கள் பயணித்த வேன் இங்குள்ள ஜாலான் சிரம்பான் -தம்பின் சாலையின் 16ஆவது கிலோமீட்டரில், இன்று அதிகாலையில் விபத்துக்குள்ளானதில், மொத்தம் 11 பேர் காயமடைந்தனர்.

பத்து ஹம்பாரில் உள்ள மதரஸா ஹயாத்துல் இஸ்லாம் மாணவர்கள் குழு, புத்ராஜெயாவில் ரமலான் மாதத்துடன் இணைந்த நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்டுவிட்டு, மீண்டும் மதரஸாவுக்குச் சென்று கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

மாவட்டக் காவல்துறைத் தலைவர், துணைக் கண்காணிப்பாளர் ஹஸ்ரி முகமட் கூறுகையில், அதிகாலை 2.43 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், முறையே 13 மற்றும் 16 வயதுடைய இரண்டு மாணவர்களின் வலது கை உடைந்ததுடன் வாய் மற்றும் ஈறுகளில் காயம் ஏற்பட்டது. அவர்களைத் தவிர ஒன்பது மாணவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்த அனைவரும் ரெம்பாவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்றார்.

“வேனின் ஓட்டுநர், முஹமட் தமிமி முஹமட் சுஹோட், 26, அவரது இடது விரலில் சிறிய காயம் அடைந்தார், மீதமுள்ள ஏழு மாணவர்களுக்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

“முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்திற்கு வந்தபோது ​​​​சாலையைக் கடந்த நரியைத் தவிர்த்ததால், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது பக்கம் சரிந்து விழுந்ததாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சாலை போக்குவரத்து சட்டம் (APJ) 1987 பிரிவு 43 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும் ஹஸ்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here