நாட்டில் 424,000 சிறுவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர்; வெளியான அதிர்ச்சி தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 18 :

மலேசியாவில் 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உடல்நலம் மற்றும் நோயுற்ற தன்மை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 424,000 சிறுவர்கள் மனநலப் பிரச்சினைகளுடன் போராடுகிறார்கள் என்று மலேசிய சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியல் சங்கம் (MYCAPs) தெரிவித்துள்ளது.

மேலும், உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் 20 விழுக்காடு சிறுவர்கள் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்களில் பெரும்பாலோர் கண்டறியப்படாமலும் சிகிச்சை பெறாமலும் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

50 விழுக்காடு பிள்ளைகளுக்கு வரும் மனநலப் பிரச்னைகள் அவர்களின் 14 வயதுக்கு முன்னர் வருவதாக அது தெரிவித்த்துள்ளது.

ஏப்ரல் 23 அன்று வரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான உலக மனநல தினத்துடன் இணைந்து வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே மலேசிய சிறுவர் மற்றும் இளம்பருவ உளவியல் சங்கம் (MYCAPs) தெரிவித்துள்ளது.

மனநலப் பிரச்சினைகளைத் தடுப்பது சிறு வயதிலிருந்தே தொடங்க வேண்டும், தரமான மற்றும் வளமான சூழலை வழங்குவதன் மூலம் தங்கள் குழந்தைகளின் மன நலனை உறுதி செய்வதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

அவர்களின் சூழல் எப்போதும் பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், அன்பாகவும் இருப்பதை உறுதிசெய்வதும் இதில் அடங்கும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here