பினாங்கு செபராங் பெராய், சுங்கை பாக்காப் தற்காலிக குடியேற்றக் கிடங்கில் இருந்து 528 ரோஹிங்கியா கைதிகள் இன்று அதிகாலை தப்பிச் சென்றனர். அவர்களில் 6 பேர், தப்பிச் செல்லும் போது சாலை விபத்தில் உயிரிழந்தனர்.
மீதமுள்ளவர்களை வேட்டையாடும் பணி நடந்து வருகிறது என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் கைருல் டிசைமி டாவூட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் தப்பிச் செல்வதற்கு முன்பு டிப்போவின் கதவு மற்றும் கிரில்லை உடைத்ததாக கைருல் கூறினார்.
இதற்கிடையில், பினாங்கு காவல்துறைத் தலைவர் ஷுஹைலி முகமட் ஜைன் காலை 6.50 மணியளவில் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க அருகாமையில் உள்ள நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற கைதிகளில் ஆறு பேர் சாலை விபத்தில் கொல்லப்பட்டனர். “கொல்லப்பட்டவர்கள் இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
கைதிகளில் பலர் சாலையைக் கடக்கத் துணியாததால் சாலையின் ஓரத்தில் நடந்து செல்வதைக் கண்ட உள்ளூர்வாசிகளால் சுற்றி வளைக்கப்பட்டதாக அவர் கூறினார். கைதானவர்களின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.









