தற்காலிக தடுப்பு முகாமில் இருந்து தப்பியோடிய கைதிகளில் 96 பேரை தேடும் பணி தொடர்கிறது

அலோர் ஸ்டார்: சுங்கை பகாப் குடிவரவு தடுப்புக் கிடங்கில் இருந்து புதன்கிழமை தப்பிச் சென்றவர்களில் இன்னும் 96 ரோஹிங்கியா கைதிகளைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை போலீஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி 76 ஆண்கள், ஒன்பது பெண்கள், 7 சிறுமிகள் மற்றும் நான்கு சிறுவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாக கெடா காவல்துறைத் தலைவர் CP Wan Hassan Wan Ahmad தெரிவித்தார். இதுவரை 218 ஆண்கள், 88 பெண்கள், 65 சிறுவர்கள் மற்றும் 61 சிறுமிகள் அடங்கிய 432 ரோஹிங்கியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தப்பியோடியவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு வான் ஹாசன் கேட்டுக் கொண்டார். 23 பேர் இன்னும் டிப்போவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார். புதன்கிழமை அதிகாலை, 528 ரோஹிங்கியா கைதிகள் டிப்போவை விட்டு வெளியேறினர். ஆனால் அவர்களில் 6 பேர் அருகிலுள்ள நெடுஞ்சாலையைக் கடக்கும்போது கார் மோதியதில் இறந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here