3 டன் காட்டுப்பன்றி இறைச்சி கடத்தல் முறியடிப்பு ; ஐவர் கைது

தும்பாட், ஏப்ரல் 22 :

இங்குள்ள பெங்காலான் குபூரில் உள்ள சட்டவிரோத படகுத்துறையில், நேற்று இரவு 7.20 மணிக்கு, மூன்று டன் காட்டுப்பன்றியின் இறைச்சியை (சடலத்தை) கடத்த முயன்ற பொது நடவடிக்கை படையின் (பிஜிஏ7) 7 ஆவது பட்டாளத்தினரால் முறியடிக்கப்பட்டது.

சுங்கை கோலோக்கில் சந்தேக நபர்கள் பன்றி இறைச்சிகளை லோரியிலிருந்து இறக்கி, படகிற்கு மாற்றியபோது இந்த சோதனை நடத்தப்பட்டது.

கள கட்டளை அதிகாரி அஸ்ஹரி நூசி கூறுகையில், சோதனை நடவடிக்கைக்கு முன்னர், புக்கிட் அமான் ஏர் ஆபரேஷன் ஃபோர்ஸ் (பிஜியு) ட்ரோன் பிரிவின் உதவியுடன் அவரது துறையினர் அரை மணி நேரம் ட்ரோனைப் பயன்படுத்தி வானிலிருந்து கண்காணிப்பு மேற்கொண்டது.

“இதன் விளைவாக, சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பலர் சம்பந்தப்பட்ட சட்டவிரோத படகுத்துறையில் ஒரு லொறியிலிருந்து படகிற்கு எதையோ இறக்கிக்கொண்டிருந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.

அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், “நாங்கள் 20 முதல் 44 வயதுடைய ஐந்து உள்ளூர் ஆண்களை கைது செய்ததுடன் ஒரு லோரியையும் பறிமுதல் செய்தோம் என்றார்.

​​”லோரியில் சோதனை நடத்தியதில் RM75,000 மதிப்புள்ள காட்டுப்பன்றியின் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டது, இது அண்டை நாட்டிற்கு கடத்தப்பட இருந்தது ,” என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் பெங்காலான் குபூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர், மேலும் பன்றிகளின் இறைச்சி (சடலம்) வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் திணைக்களத்திடம் அடுத்த நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here