ஜோகூர் பாரு, ஏப்ரல் 28 :
ரமலான் நோன்புப்பெருநாள் (ஹரி ராயா ஐடில்பித்ரி) கொண்டாட்டங்கள் முடிந்தவுடன் 300,000 இந்தோனேசியர்கள் மலேசியாவிற்குள் நுழைவார்கள் என்று இந்தோனேசிய தூதரகம் எதிர்பார்க்கிறது.
மலேசியாவுக்கான இந்தோனேசிய தூதர் ஹெர்மோனோ கூறுகையில், இதற்கு முன்பு மலேசியாவின் அனைத்துலக எல்லை மூடப்பட்ட காலத்தில் இந்தோனேசிய குடிமக்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததே இதற்குக் காரணம்.
அவரைப் பொறுத்தவரை, தற்போது வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கி வரும் மலேசிய வேலை சந்தையின் தேவைக்கேற்ப, இந்த எண்ணிக்கையும் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
நோன்புப்பெருநாள் பண்டிகை காலத்திற்குப் பிறகு, மலேசியாவின் வேலை காலியிடங்களை நிரப்ப குறைந்தபட்சம் 300,000 இந்தோனேசியர்கள் மலேசியாவில் படிப்படியாக நுழைவார்கள் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.
“இது சம்பந்தமாக, அனைத்து இந்தோனேசியர்களும் சரியான மற்றும் சட்ட ரீதியான நுழைவுகளை பயன்படுத்துமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என்று அவர் மேலும் கூறினார்.