கோத்தா பாரு, ஏப்ரல் 30 :
நேற்று, இங்குள்ள கோத்தா பாரு-கெட்டேரே நெடுஞ்சாலையில், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஒட்டிய மற்றும் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 பேர் கொண்ட ஒரு குழுவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை துணை இயக்குநர் டத்தோ முகமட் நட்ஸ்ரி ஹுசைன் கூறுகையில், மாலை 6.35 மணியளவில், கோத்தா பாரு-கெட்டேரே நெடுஞ்சாலையைச் சுற்றி போலீசார் கண்காணிபில் ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் குழு அவர்களுக்குள் போட்டி மற்றும் ஜிக்-ஜாக் நடவடிக்கை போன்றவற்றை கோத்தா பாருவை நோக்கிய கோட்டா பாரு-கெட்டேரே நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 12 முதல் கிமீ 6 வரை மேற்கொண்டதை கண்டனர்.
அவரது கூற்றுப்படி, இரவு 7.30 மணியளவில், 16 முதல் 26 வயதுடைய ஒன்பது பேர் கம்போங் சிரே பவா லெம்பாவில் சாலையின் கரையில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தினர்.
“பின்னர், போலி பதிவு எண்ணுடன் ஹோண்டா EX5 மோட்டார் சைக்கிளை பயன்படுத்தியதற்காக ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் “ஓட்டுநர் உரிமம் இல்லாத ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர், மேலும் சந்தேக நபர்கள் அனைவரும் கோத்தா பாரு மாவட்ட போக்குவரத்து அமலாக்க புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் அனைவரும் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 42 இன் கீழ் விசாரிக்கப்பட்டதாகவும், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 60 இன் கீழ் விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“போலி பதிவு எண்ணைப் பயன்படுத்திய ஒருவர் மீது சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 பிரிவு 108ன் கீழ் வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையின் போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக மொத்தம் 49 சம்மன்கள் விதிக்கப்பட்டன என்றார்.