தாமான் பெர்மாத்தாவில் குழாய் வெடித்ததால், கோலாலம்பூரின் 15 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர், ஏப்ரல் 30 :

தாமான் பெர்மாத்தாவில் உள்ள புடு உலு பாரு பம்ப் ஹவுஸில் குழாய் வெடித்ததைத் தொடர்ந்து, கோலாலம்பூரின் 15 பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது என்றும் அவசர பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆயிர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

பழுதுபார்க்கும் பணிகள் சனிக்கிழமை (ஏப்ரல் 30) ​​காலை 11.30 மணி முதல் நடைபெற்று வருகிறது என்றும்,திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக புக்கிட் பெர்மை இண்டஸ்ட்ரி, கம்போங் செராஸ் பாரு, பாண்டான் பிஸ்தாரி, தாமான் புக்கிட் பாண்டான், தாமான் புக்கிட் பெர்மை, தாமான் புக்கிட் டெரடை, தாமான் மாவார், தாமான் மெகா ஜெயா, தாமான் மேலூர், தாமான் மேஸ்திகா, தாமான் மூடா, தாமான் பாண்டான் மேவா, தாமான் புத்ரா, தாமான் சாகா மற்றும் தாமான் செரயா ஆகியன அடங்கும் என்று ஆயிர் சிலாங்கூர் (Pengurusan Air Selangor Sdn Bhd) கூறியுள்ளது.

“இன்று (ஏப்ரல் 30) ​​இரவு 9.30 மணிக்கு பழுதுபார்க்கும் பணிகள் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பழுதுபார்க்கும் பணிகள் முடிந்ததும் நுகர்வோர் வளாகங்களுக்கு நீர் விநியோகம் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும்” என்று ஆயிர் சிலாங்கூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்படாத நீர் விநியோகத் தடையின் போது முக்கியமான இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் டேங்கர்கள் மூலம் மாற்று உதவி வழங்கப்படும் என்று அது மேலும் கூறியது.

மேலும், இது தொடர்ப்பன்ன புதுப்பிக்கப்பட்ட விவரங்களை ஆயிர் சிலாங்கூர் அவ்வப்போது படிப்படியாக வழங்கும் என்றும் அது கூறியது.

“இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு நுகர்வோர் ஆயிர் சிலாங்கூரின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேனல்கள், அதாவது ஆயிர் சிலாங்கூர் செயலி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகியவற்றைப் பார்க்கலாம் அல்லது ஆயிர் சிலாங்கூர் தொடர்பு மையத்தை 15300 இல் தொடர்பு கொள்ளலாம்” என்று அது கூறியது.

அத்தோடு விசாரணைகள் மற்றும் புகார்களை www.airselangor.com வழியாகவும் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here