போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 17 வாகனங்களுக்கு சம்மன்!

கோத்தா திங்கி, மே 1:

துன் ஸ்ரீ லானாங் தேர்மினலைச் சுற்றி, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 17 வாகனங்களுக்கு போலீசாரால் சம்மன்கள் விதிக்கப்பட்டது.

கோத்தா திங்கி மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் நிக் அசாஹாம் நிக் அஜீஸ் கூறுகையில், கோத்தா திங்கி மாவட்ட போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுப் பிரிவவினர், அந்த இடத்தில் சாலையில் நெரிசல் ஏற்படுவது குறித்து பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெற்றது.

அவரைப் பொறுத்தவரை, பல ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களை சாலையின் இரு புறமும், வாகனங்கள் செல்லக்கூடாத பகுதிகளிலும் நிறுத்துகிறார்கள்.

மேலும், ‘டபுள் பார்க்கிங்கில்’ வாகனங்களை நிறுத்துவதால், மற்ற வாகனங்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு, விபத்துகளை ஏற்படுத்துகிறது.

பொதுமக்களின் தகவலின் பேரில் “நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், போக்குவரத்து இடையூறு விளைவித்த குற்றங்களுக்காக மொத்தம் 17 வாகனங்களுக்கு போலீஸ் சம்மன்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சாலை விதிகளை எப்போதும் கடைப்பிடிக்கவும், வாகனங்களை நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்தவும், சாலையைப் பயன்படுத்துவோர் அறிவுறுத்துகிறார்கள் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here