மலையேறும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஆடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

ரவாங், மே 8 :

புக்கிட் ரவாங் பைபாஸில் ஏறும் போது ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், தங்களுக்கு காலை 11.26 மணிக்கு சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்ததாகவும், காலை 11.40 மணிக்கு அந்த இடத்திற்கு வந்ததாகவும் கூறினார்.

அவரது கூற்றுப்படி, சம்பவ இடத்திற்கு தமது துறையினர் வந்தபோது, ​​​​54 வயதான பாதிக்கப்பட்டவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதுடன் அவரால் கீழே இறங்க முடியவில்லை.

“அதனை தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு, செலாயாங் மருத்துவமனையில் சேர்த்தனர்.

“பாதிக்கப்பட்டவர் நல்ல நிலையில் இருப்பதாகவும், பிற்பகல் 1.39 மணிக்கு இந்த நிலை முடிந்தது” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here