ஹெலிகாப்டர் “நாசி கஞ்சா” வழக்கில் டத்தோ பட்டம் கொண்ட நிறுவன முதலாளி மீது குற்றச்சாட்டு

ஈப்போ: புகழ்பெற்ற “நாசி கஞ்சா” ஆர்டர்களை எடுப்பதற்காக ஈப்போ பாடாங்கில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார். முகமது ரஃபே கே செகு 53, குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

“டத்தோ” பட்டம் கொண்ட ரஃபே, சமர்ப்பிக்கப்பட்ட விமானத் திட்டத்திற்கு இணங்காமல், விமானத்தின் சிவில் ஏவியேஷன் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் பெல் 505 விமானத்தை படாங்கில் தரையிறக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ஜூலை 23, 2021 அன்று காலை 9.50 மணி முதல் 10 மணி வரை இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது. மாஜிஸ்திரேட் ஜெசிகா டெய்மிஸ் முன் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரஃபே அதிகபட்சமாக RM50,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அவர் ஒரு நபர் உத்தரவாதத்துடன்  RM5,000 ஜாமீனில் வெளிவர  அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த விசாரணைக்கான தேதியை  நீதிமன்றம் ஜூன் 29 அன்று நிர்ணயித்து இருக்கிறது வழக்கு விசாரணையை துணை அரசு வழக்கறிஞர் ஜீன் சர்மிளா ஜேசுதாசன் நடத்தினார். ரஃபே சார்பில் வழக்கறிஞர் பல்ஜித் சிங் சித்து ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here