கோத்தா கினாபாலு, மே 10 :
நேற்று முதல் சபாவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வெள்ளம் காரணமாக அங்குள்ள மூன்று மாவட்டங்களில் உள்ள 8 பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில கல்வி இயக்குநர் டத்தோ டாக்டர் மிஸ்டிரின் ராடின் தெரிவித்தார்.
செக்கோலா மெனெங்கா கேபாங்சான் (SMK) செயின்ட் பால், செக்கோலா கேபாங்சான் (SK) லாகோ மற்றும் SK புகாவ் ஆகிய மூன்று பள்ளிகள் பியூஃபோர்ட்டில் இருப்பதாக அவர் கூறினார்; மேலும் நான்கு பள்ளிகள் டெனோமில் உள்ளன. அதாவது SK குமிசி, SK லடோங் சாபோங், செக்கோலா ஜெனிஸ் கேபாங்சான் சீனா யுக் சின் மற்றும் SK இனுபாய், மற்றொன்று பெனாம்பாங்கில் உள்ள SK தோம்போவோ ஆகியவையே மூடுமாறு உத்தரவிடப்பட்ட பள்ளிகளாகும்.
“எட்டுப் பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன, இதில் மொத்தம் 204 ஆசிரியர்கள் மற்றும் 2,425 மாணவர்கள் உள்ளனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
வெள்ள நிலைமை மேம்பட்டு அவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்குத் திரும்பும் வரை, மாணவர்கள் வீட்டு அடிப்படையிலான இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) முறை மூலம் தங்கள் பாடங்களைத் தொடருவார்கள் என்று அவர் கூறினார்.