கோம்பாக், மே 14 :
செலாயாங் காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்ட (படத்திலுள்ள) குழந்தையின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜைனல் முகமட் முகமது கூறுகையில், பொதுமக்கள் அந்தக் குழந்தை செலாயாங் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதன்படி நேற்று பிற்பகல் 2.24 மணியளவில் மூன்று முதல் நான்கு வயதுடைய குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 சென்டிமீட்டர் உயரம் மற்றும் கருமையான சருமம் கொண்ட ஒரு குழந்தை தொடர்பான புகாரில், வழி தெரியாது தெருவில் நின்ற அந்தக் குழந்தை புகார்தாரரின் சகோதரரால் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதை கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) உறுதிப்படுத்தியது.
“புகார்தாரருக்கு சம்பந்தப்பட்ட குழந்தையைத் தெரியாது என்றும் புகார்தாரரின் சகோதரர் குழந்தையை எங்கே கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை” என்று அவர் நேற்று இரவு ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
குழந்தை மேலதிக பரிசோதனைக்காக செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் மேல் நடவடிக்கைக்காக கோம்பாக் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த குழந்தை தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் சார்ஜென்ட் ரஃபிதா அப்துல் அஜீஸை 019-3509963 என்ற எண்ணிலோ அல்லது கோம்பாக் IPD செயல்பாட்டு அறைக்கு 03-61262222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார்.









