உணவு நஞ்சானதாக கூறப்படும் காணொலி தொடர்பில், தூய்மைக்கேடாக இருந்த அந்த உணவகத்தை மூட உத்தரவு – ஜோகூர் சுகாதாரத்துறை

ஜோகூர் பாரு, மே 16 :

உணவகம் ஒன்றின் உணவு நஞ்சானதாக கூறும் ஒரு வீடியோ கிளிப்பைத் தொடர்ந்து, ஜோகூர் சுகாதாரத் துறை (ஜேகேஎன்ஜே) நடத்திய சோதனை நடவடிக்கையில், அதன் தூய்மையின் அளவு திருப்திகரமாக இல்லை என்பதைக் கண்டறிந்ததை அடுத்து, மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று (மே 15) ஒரு வாடிக்கையாளர் கடையில் ரொட்டி சாப்பிட்ட பிறகு அவருக்கு உணவு நஞ்சு ஆகி ஒவ்வாமை ஏற்பட்ட்தாக கூறும் ஒரு வீடியோவைத் தொடர்ந்து, தாம் விசாரணை நடத்தியதாக மாநில சுகாதாரம் மற்றும் ஒற்றுமைக் குழுத் தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.

அந்த உணவகத்தில் தூய்மையின் அளவு திருப்திகரமாக இல்லை என்று கண்டறியப்பட்டு மூட உத்தரவிடப்பட்டது. உணவு சுகாதார விதிகள் 2009 ஐ மீறும் குற்றங்களுக்காக உணவுச் சட்டம் 1983 இன் பிரிவு 32B இன் கீழ் மூன்று அறிவிப்புகளும் வழங்கப்பட்டது.

“ஜோகூர் பாரு மாவட்ட சுகாதார அலுவலகம் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உணவு நச்சு வழக்குகளை மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

“சுகாதாரத்தின் அளவு திருப்திகரமாக இருக்கும் உணவகங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உணவு நஞ்சாகும் அபாயத்தைக் குறைக்க பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று லிங் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

உணவு நச்சு சம்பவங்களைத் தவிர்க்கவும், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற உணவு நச்சுத்தன்மையின் அறிகுறிகளைக் கண்டறிந்து உடனடி சிகிச்சையைப் பெறவும் சாப்பிடுவதற்கு முன் உணவின் “தோற்றம், வாசனை மற்றும் சுவை” ஆகியவற்றை பரிசோதனை செய்யுமாறு லிங் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here