3 வயது சிறுவனை துன்புறுத்திய பாதுகாவலர் போலீசாரால் கைது

சிறுவனை துன்புறுத்திய  சந்தேகத்தின் பேரில் 3 வயது சிறுவனின் பாதுகாவலரை போலீசார் கைது செய்துள்ளனர். 41 வயதுடைய பகுதி நேர ஒப்பந்ததாரரான இவர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவன் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் நேற்று மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றத்திற்காக அவரது பெற்றோர் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால், ஜனவரி முதல் அவர் அந்த நபரின் பராமரிப்பில் இருந்தார்.

சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரின் தந்தையின் நண்பர் மற்றும் அவரது பெற்றோர் சிறையில் இருக்கும் போது பாதிக்கப்பட்டவரை கவனித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார் என என்று அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஃபரூக் எஷாக் கூறினார். சந்தேக நபர் இதற்கு முன்னர் நான்கு குற்றச் செயல்களில் தண்டனை பெற்றவர் எனவும் அவர் கூறினார். நாளை போலீஸ் காவலில் வைக்க உத்தரவினை பெறவிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here