துங்கு அஜிசா மருத்துவமனை வார்டில் விடப்பட்ட குழந்தை கே. தேவியின் தாய் தேடப்படுகிறார்; உலு லங்காட் சமூக நல அலுவலகம் தகவல்

கோலாலம்பூர், மே 18 :

கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி, இங்குள்ள துங்கு அஜிசா மருத்துவமனை வார்டில் விடப்பட்ட ஒரு பெண் குழந்தையையின் தாயை, உலு லங்காட் மாவட்ட சமூக நல அலுவலகத்தினர் தேடிவருகின்றனர்.

உலு லங்காட் மாவட்ட சமூக நல அலுவலகத்தின்படி, மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பெண் குழந்தைக்கு கே.தேவி என்று பெயரிடப்பட்டுள்ளது.

“குழந்தையின் தாயைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் உலு லங்காட் மாவட்ட சமூக நல அலுவலகத்தை 03-83738007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here