போதைப்பொருள் அடிமையாதல் மறுவாழ்வு மையத்தின் இரு பயிற்சியாளர்கள், ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி மரணம்

குவாந்தான், மே 19 :

இன்று ரவூப், கம்போங் குண்டாங் பாடாவில் அமைந்துள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திலுள்ள ஏரியில் குளித்தபோது, போதைப்பொருள் அடிமையாதல் மறுவாழ்வு மையத்தின் (PUSPEN) இரண்டு ஆண் பயிற்சியாளர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) துணை இயக்குநரான இஸ்மாயில் அப்துல் கானி கூறுகையில், பலியான 43 வயதுடைய முதலாவது நபரின் உடல் மாலை 4 மணியளவில் 10 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது, பின்னர் 37 வயதுடையவர் இரண்டாவது நபரின் சடலம் 4 நிமிடங்கள் கழித்து 8 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டது.

“தீயணைப்புப் பிரிவினர் நீர் மேற்பரப்பில் தேடுதல்களை நடத்தி, பின்னர் இரும்பு உபகரணங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பிற்பகல் 3.04 மணிக்கு அவரது துறைக்கு அவசர அழைப்பு வந்தது.ர அதனைத் தொடர்ந்து ரவூப் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அதிகாரிகள் உட்பட, ஏழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here