கெப்போங்கிலுள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 32 அரிசி மூட்டைகள் பறிமுதல்

கோலாலம்பூர், மே 20 :

கெப்போங்கில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகம் பயன்படுத்துவதாக நம்பப்படும் ஒரு வீட்டில், சட்டவிரோதமாக அரிசியை பதுக்கி வைத்திருந்தது சோதனையில் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

வேளாண்மை மற்றும் உணவுத் தொழில் அமைச்சகத்தின் (Mafi) நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறை அமலாக்கப் பிரிவு (BPKPB) செவ்வாயன்று நடத்திய சோதனையில், RM7,200 மதிப்புள்ள 32 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமது கிடைத்த தகவலை அடுத்து, இந்த சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம் அஸ்மான் மஹ்மூட் தெரிவித்தார்.

“வீட்டைச் சோதனை செய்ததில், உள்ளூர் சந்தையில் விற்கப்படுவதற்கு முன்பு சேமிக்கப்பட்டதாக நம்பப்படும் மற்றய மளிகைப் பொருட்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

“அந்த நபர் அரிசி உரிமம் மற்றும் அரிசி கொள்முதல் விலைப்பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியதால், அவை பறிமுதல் செய்யப்பட்டன, அதே நேரத்தில் இது சட்டம் 522 (நெல் மற்றும் அரிசி கட்டுப்பாடு) 1994 இன் கீழ் குற்றமாகும்.

“குற்றம் குறித்து வளாக உரிமையாளருக்கு விளக்கமளித்த பின்னர், மேலும் விசாரணைக்காக பில் புத்தகம் மற்றும் 32 அரிசி மூட்டைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் இன்று கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, சட்டவிரோத அரிசி விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றில் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளையும் அவரது துறை தொடர்ந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here