சிலாங்கூர் கல்வித்துறை ஆசிரியர் தின கொண்டாட்டத்திற்காக இதுவரை RM65,000 நிதி திரட்டியுள்ளது

கோலாலம்பூர், மே 20 :

எதிர்வரும் மே 24 அன்று ஷா ஆலாமில் உள்ள ஐடிசிசியில் நடைபெறும் ஆசிரியர் தின கொண்டாட்டத்துடன் இணைந்து, மாநில அளவிலான ஆசிரியர் தின விருது விழாவுக்காக சிலாங்கூர் கல்வித் துறை RM65,000 நிதி திரட்டியுள்ளது.

அந்தக் குழுவின் பிரதான தலைவர் கமால் அசிசி அப்துல் அஜீஸ் கூறுகையில், பெறப்பட்ட நிதியானது அரசு மற்றும் தனியார் துறை தனிநபர்களின் பங்களிப்புகளின் விளைவாகும் என்று கூறினார்.

“பங்களிப்பானது மேஜை விற்பனையில் இருந்து திரட்டப்பட்டது. அதாவது பிளாட்டினம் RM3,000 விலையில் தங்கம் RM2,500, வெள்ளி RM2,000, மற்றும் வெண்கலம் RM1,500 என இந்த மேஜை விற்பனை நிதி திரட்டப்பட்டது.

1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்வில், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதற்கான ஒரு நடவடிக்கையாகும் என்றார்.

அதே விழாவில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் டத்தோ முகமட் ரஷித் ஹாஸ்னான், தேசத்திற்காக பெரும் தியாகங்களைச் செய்த ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் முயற்சியைப் பாராட்டினார்.

இந்த உன்னதமான முயற்சி அனைத்து தரப்பினரும் ஆசிரியர் தினத்துடன் இணைந்து கல்வியாளர்களுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவிக்க வாய்ப்பாக அமையும் என்றார்.

“இதுபோன்ற நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் உள்ள கல்வித் துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நாடுமுழுவதும் தொடரலாம் என்று அவர் நம்புவதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here