கம்போங் பாரு குண்டாங்கில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தாயும் அவரது மகனும் இறந்து கிடந்தனர். அவர்களின் மரணத்தில் குற்றச் செயல்களுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ஒரு அறிக்கையில், கோம்பாக் OCPD உதவி ஆணையர் ஜைனல் முகமது முகமது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார்.
சம்பவ இடத்தில் 71 வயதான பெண் மயக்கமடைந்த நிலையிலும், 35 வயதுடைய ஆடவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் நடந்த விசாரணைகளில் தவறான குற்றச் செயல்களுக்கான எதுவும் இல்லை. மேலும் வலுக்கட்டாயமாக வீட்டில் நுழைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும் பாதிக்கப்பட்ட உடமைகள் இன்னும் வீட்டிற்குள் இருந்தன. முழு பிரேத பரிசோதனை அறிக்கை நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கு திடீர் மரண அறிக்கையாக பட்டியலிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.