100க்கும் மேற்பட்ட கஞ்சா செடி வளர்த்ததாக டத்தோ பட்டம் கொண்டவர் கைது

ஒரு தோட்டத்தில் ஏறக்குறைய 100 கஞ்சா மரங்களை பயிரிட்டதாக  குற்றம் சாட்டப்பட்ட “டத்தோ” என்ற பட்டம் கொண்ட மலேசியாவின் முன்னாள் தூதரக அதிகாரியை போலீசார் கைது செய்ததாக NST  தெரிவிக்கின்றன.

போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (என்சிஐடி) குழு, பகாங்கின் Janda Baik இடத்தில் உள்ள சந்தேக நபரின் இல்லத்தில் வார இறுதியில் மாலை 6 மணியளவில் சோதனை நடத்தியதாக ஒரு ஆதாரம் NST இடம் தெரிவித்தது.

காய்ந்த கஞ்சா இலைகள் மற்றும் திரவத்துடன் கஞ்சா எண்ணெய் என நம்பப்படும் கொள்கலன்களை போலீசார் கண்டுபிடித்தனர். டத்தோ மே 28 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here