பெனாம்பாங், மே 27:
இங்குள்ள Jalan Bundusan என்ற இடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்பு நடவடிக்கையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஐந்து ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் ஜூப்ரி உஸ்மான் தலைமையிலான பெனாம்பாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவு (BSPT) மூலம் Operasi Op Mabuk நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெனாம்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை கண்காணிப்பாளர் முகமட் ஹாரிஸ் இப்ராஹிம் கூறுகையில், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி குடிபோதையில் வாகனம் ஓட்டியதைக் கண்டறிந்த பின்னர் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அதே நடவடிக்கையில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களை உள்ளடக்கிய 12 சம்மன்களையும் அவரது துறை வழங்கியதாக அவர் கூறினார்.
“இந்த நடவடிக்கை மூலம் சாலைச் சட்ட அமலாக்கத்தில் கவனம் செலுத்துவது மற்றும் சாலை விபத்துகளின் நிகழ்வுகளைக் குறைப்பதற்கான முயற்சிகள் செய்யப்படுவதாக” அவர் கூறினார்.
குற்றத்தடுப்பு மற்றும் பொதுக் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் தமது துறை எப்போதும் உயர் அர்ப்பணிப்பை வழங்கும் என முகமட் ஹரீஸ் தெரிவித்தார்.