பெண்ணிடம் கொள்ளையடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இரு நண்பர்கள் தாம் குற்றமற்றவர்கள் எனக் கூறி விசாரணை கோரினர்

ஜோகூர் பாரு, ஜூன் 2 :

இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணிடம் கொள்ளையடித்து மற்றும் அவரை காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், இரண்டு ஆண்கள் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட பி. சத்தியா, 43 மற்றும் அவரது நண்பர் ஏ.சிதம்பரம், 32, ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்ச்சாட்டு, நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நீதிபதி பாத்திமா ஜஹாரி முன்நிலையில் வாசிக்கப்பட்ட பின்னர், அவர்கள் தங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறி விசாரணை கோரினர்.

குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், புக்கிட் சென்யாம், ஜாலான் லிங்ககரான் தாலத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் உள்ள, ஒரு பணம் மாற்றும் கடைக்குப் பின்னால் இருந்த ஒரு பெண்ணின் சொத்தை, அதாவது SGD 110,000 (RM345,730) பணத்தை அவர்கள் இருவரும் கூட்டாக கொள்ளையடித்தனர்.

மேலும், ஏப்ரல் 29 அன்று காலை 10.10 மணியளவில் நடந்த சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் வேண்டுமென்றே பெண்ணுக்கு காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 394 இன் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது மற்றும் அதே குறியீட்டின் பிரிவு 34 உடன் சேர்த்து படிக்கப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படிக்கு ஆளாக நேரிடும்.

துணை அரசு வழக்கறிஞர் நூர்ஹயாத்தி முகமட் அப்துல்லா வழக்கை நடத்தினார். குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் Syufri A Samad, அவர்கள் ஒவ்வொருவரும் சார்ந்திருப்பவர்கள் என்ற அடிப்படையில் தனது கட்சிக்காரருக்கு குறைந்தபட்ச ஜாமீன் வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

“சத்தியா ஒரு லோரி டிரைவராக மாத வருமானம் RM1,600 உடன் பணிபுரிகிறார், மேலும் அவரது மனைவி மற்றும் 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு குழந்தைகளை அவரே பராமரிக்கிறார் என்று விண்ணப்பித்தார்.

“இதற்கிடையில், சிதம்பரத்திற்கு நிரந்தர வேலை இல்லை, மேலும் அவர் நீரிழிவு மற்றும் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அவரது 55 வயதான தாயை பார்த்துக்கொள்கிறார்,” என்று அவர் கூறினார்.

பின்னர் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா RM12,000 ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது, மேலும் மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனையுடன், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தமது அனைத்துலக பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.

இந்த வழக்கில் ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக ஜூலை 5-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்று, ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில், இந்தக் கூட்டுக் கொள்ளை வழக்கில் சந்தேக நபர்களை மே 23 அன்று கைது செய்ததாகவும், திருடப்பட்ட பணம் மற்றும் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்தார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 37 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here