வாகனம் நிறுத்தும் கருவியில் (breaks) பிரச்சினை காரணமாக, ஒரு மில்லியன் மெர்செடிஸ் வாகனங்கள் சந்தையிலிருந்து திருப்பிப் பெறப்படும்

உலகளவில் ஒரு மில்லியன் மெர்செடிஸ் வாகனங்கள் திருப்பி பெறப்படும் என மெர்சடிஸ்-பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களில் வாகனம் நிறுத்தும் கருவியில் (break) பிரச்சினை இருப்பதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட வாகனங்கள் 2004க்கும் 2015க்கும் இடையே தயாரிக்கப்பட்ட எம்எல், ஜிஎல் ரக எஸ்யூவி வாகனங்கள், ஆர்-கிளாஸ் சொகுசு வேன் ஆகியவை என தெரிவிக்கப்பட்டது.

உலகெங்கும் 993,407 வாகனங்களும், ஜெர்மனியிலிருந்து 70,000 வாகனங்களும் திருப்பி பெற்றுக்கொள்ளப்படும்.

வாகனத்தை நிறுத்தும் கருவி பழுதடைந்தால் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம். இதனால் விபத்து நடக்கக்கூடும்.

பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களை தாம் உடனடியாகத் தொடர்புகொண்டுவருவதாக நிறுவனம் தெரிவித்தது. சோதனை மேற்கொள்ளும்வரை வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று நிறுவனம் வலியுறுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here