பள்ளிப் பேருந்துக் கட்டணம் 10 வெள்ளிக்கு மிகாமல்அதிகரிக்கப்படலாம்

கோலாலம்பூர், ஜூன் 6 :

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் பள்ளிப் பேருந்துக் கட்டணங்கள் 10 வெள்ளிக்கு மிகாமல் உயர்த்தப்படலாம் என்று மலேசிய பள்ளி பேருந்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முகமட் ரோஃபிக் முகமட் யூசோப் தெரிவித்தார்.

நாட்டில் வாகன உதிரி பாகங்கள் சம்பந்தப்பட்ட விலைக் கட்டுப்பாடு இல்லாததால் பள்ளி பேருந்து கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை மேலும் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து பள்ளி பேருந்து நடத்துநர்கள் அதிக பராமரிப்பு செலவுகளை ஏற்க வேண்டியிருக்கிறது என்றார்.

அத்தோடு பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் பற்றாக்குறையும் இந்த கட்டணம் அதிகரிப்புக்குக் காரணம் என்று அவர் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, வேலை இழந்த பல ஓட்டுநர்கள் இப்போது வேறு வேலைகளில் வசதியாக வேலை செய்து வருவதாக அவர் கூறினார்.

“முந்தைய ஓட்டுநர் சம்பளம் RM1,500 முதல் RM1,600 ஆக இருந்தது, ஆனால் இப்போது காலியிடத்தை நிரப்ப வேண்டுமானால் RM2,500 வரை ஓட்டுநர் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

“பேருந்து பராமரிப்பு செலவு மற்றும் ஓட்டுநர் சம்பளம் போன்ற செலவையும் நடத்துனர்களே ஏற்க வேண்டும், இச்செலவீனங்களாலும் பள்ளிப் பேருந்து கட்டணம் அதிகரிக்க காரணம் ” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here