ஷா ஆலாம், ஜூன் 8 :
இந்தாண்டு மே 1 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை, நாடு முழுவதும் மொத்தம் 8,843 புதிய முதலாளிகள் SOCSO இல் பதிவு செய்துள்ளனர்.
ஏப்ரல் 2022 இல் பதிவு செய்த 7,709 புதிய முதலாளிகளுடன் ஒப்பிடுகையில், இது 14 சதவிகிதத்திற்கும் அதிகமான அதிகரிப்பு என்று SOCSO தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் அஸ்மான் அஜிஸ் முகமட் கூறினார்.
“இன்னும் பதிவு செய்யாத அனைத்து முதலாளிகளையும் SOCSO வில் பதிவு செய்ய முன்வருமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் இன்னும் நாடு முழுவதும் உள்ள SOCSO அலுவலகங்களில் பதிவுகளை ஏற்றுக்கொள்கிறோம், அவர்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது, ”என்று அவர் கூறினார்.
அவரது கூற்றுப்படி, பணியாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4) மற்றும் வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பு சட்டம் 2017 (சட்டம் 800) ஆகியவற்றின் அடிப்படையில், சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் குறைந்தபட்சம் ஒரு பணியாளரையாவது பணியமர்த்தும் அனைத்து முதலாளிகளும் SOCSO ஏஜென்சியில் பதிவு செய்ய வேண்டும்.
முதலாளிகளுக்கு 1.75 சதவிகிதம் மற்றும் ஊழியர்களுக்கு 0.5 சதவிகிதம் மட்டுமே பங்களிப்பு விகிதம் வசூலிக்கப்படுவதால், முதலாளிகள் பொறுப்பை ஒரு சுமையாகப் பார்க்கக்கூடாது என்று அவர் கூறினார்.
“இதை ஒரு சுமையாக பார்க்காதீர்கள்; ஊழியர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் யார் ஆதரவளிப்பார்கள்?
“மருத்துவம், மறுவாழ்வு, இயலாமை மற்றும் இறப்பு ஆகிய ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும், அவருக்கு SOCSOவில் பங்களிப்பு இருந்தால், அவர்களின் குடும்பங்களின் தலைவிதி பாதுகாக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி, ‘Ops Kesan’ மூலம் நாடு முழுவதும் மொத்தம் 1,258 முதலாளிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளனர், மேலும் Socso இல் பதிவு செய்யப்படாத 220 முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.