இணையத்தில் வைரலாகும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாரா கழுத்தில் தாலி கட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா இன்று 09.06.2022 மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

இதுவரை எந்தவொரு புகைப்படமும் லீக் ஆகாத நிலையில், இயக்குநர் விக்னேஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவள் 9 நான் 1 இருவரும் இணைந்து 10 ஆனோம் என காலை 10 மணிக்கு திருமணம் நடைபெற்றதை குறிப்பிட்டு முதல் முறையாக பிரத்யேக திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா என்ன மாதிரியான பட்டுப் புடவையை திருமணத்துக்கு பயன்படுத்த உள்ளார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், சிகப்பு ரோஜாக்களை அடுக்கி வைத்தது போன்ற டிசைன் கொண்ட உடையில் மணமகளாக மேடையை அலங்காரித்துள்ளார்.

நயன்தாரா,விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஏராளாமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, போனிகபூர், அனிருத், அட்லி உள்ளிட்ட முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் திரைப்பிரபலங்கள் தங்கள் குடும்பங்களுடன் கலந்து கொண்டு திருமண வாழ்த்து தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here