சிரம்பான், ஜூன் 9 :
நேற்று இம்மாவட்டத்தில் நடந்த ஓப்ஸ் கேசன் நடவடிக்கையை தொடர்ந்து, RM45,000 மதிப்புள்ள மொத்தம் 49 அபராதங்கள் SOCSO (சமூக பாதுகாப்பு அமைப்பு) அமலாக்கதுறையினரால் விதிக்கப்பட்டது.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆய்வில், செனாவாங்கைச் சுற்றியுள்ள மொத்தம் 228 வளாகங்களை ஆய்வு செய்ததாக, நெகிரி செம்பிலான் மாநில SOCSO இயக்குநர் ஃபுவாட் அலியாஸ் கருத்து தெரிவித்தார்.
“ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4) மற்றும் வேலைவாய்ப்புக் காப்பீட்டு அமைப்பு சட்டம் 2017 (சட்டம் 800) ஆகியவற்றின் கீழ் உள்ள குற்றங்களுக்காக இவ் அபராதங்கள் விதிக்கப்பட்டது என்றார்.
“சுய-வேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 789) இன் கீழ் உள்ள குற்றங்களுக்காக, e-hailing மற்றும் p-hailing துறைகளின் கீழ் சுயவேலைவாய்ப்பைப் பதிவு செய்யத் தவறியதற்காக 12 பேருக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன், 56 நபர்களை மதிப்பாய்வு செய்தோம்,” என்று அவர் கூறினார்.
டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, நெகிரி செம்பிலானில் உள்ள SOCSO நிறுவனத்திடமிருந்து பாதுகாப்பைப் பெற்ற மொத்தம் 38,985 முதலாளிகள் மற்றும் 250,465 பணியாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
“இருப்பினும், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய ஆனால் SOCSO வில் பதிவு செய்யாத முதலாளிகள் இன்னும் இருப்பதாகதாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
மேலும் “மே 1 முதல் 31 வரையிலான காலத்தில், மொத்தம் 224 புதிய முதலாளிகள் பதிவு செய்ய முன்வந்தனர். “இது முந்தைய மாதத்தில் (ஏப்ரல் 2022) பதிவுசெய்யப்பட்ட 173 முதலாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, 30 சதவிகிதம் அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது” என்று அவர் கூறினார்.
சட்டம் 789ன் கீழ், மொத்தம் 5,867 சுயதொழில் செய்பவர்கள் e-hailing மற்றும் p-hailing துறைகளின் கீழ் டிசம்பர் 2021 வரை பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.