நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 140 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைத்து இந்திய தூதரகத்திடம் மகஜர் கையளிப்பு

கோலாலம்பூர், ஜூன் 10 :

முகமது நபி (ஸல்) அவர்களைப் பற்றி இந்தியாவின் ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களின் இழிவான கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மலேசியாவிலுள்ள மொத்தம் 140 அரசு சாரா நிறுவனங்கள் ஒன்றிணைத்து இன்று மகஜர் ஒன்றை மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் கையளித்தன.

Majlis Amal Islami Malaysia (MAIM) நிறுவனத்தின் தலைவர் முஹமட் நஜான் ஷாஹிர் ஹலீம் அவர்கள் தலைமை தாங்கிய அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகையில், முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்ட இரு கட்சித் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, இந்திய அரசை குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியை (BJP) வலியுறுத்தினோம்.

“இந்திய அரசாங்கம் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் எதிர்காலத்தில் இது போன்ற தவறு மீண்டும் நடக்காது என்று உறுதியளிக்க வேண்டும்,” என்று அவர் இங்குள்ள இந்திய தூதரகத்தின் ஒரு அதிகாரியிடம் மகஜரை கையளித்த பின்னர், செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக நாட்டின் ஒட்டுமொத்த மறுப்பைத் தெரிவிக்கும் வகையில், கடந்த செவ்வாயன்று மலேசியாவுக்கான இந்திய தூதுவரை வரவழைத்து, தமது எதிர்ப்பை வெளியிட்ட மலேசிய அரசாங்கத்தின் முயற்சிகள் மற்றும் உறுதியான நடவடிக்கைக்கு அரசு சாரா அமைப்புகள் நன்றியும் ஆதரவையும் தெரிவிக்கின்றன என்றார்.

இந்த விவகாரத்தில் அனைத்துலக ரீதியில் எதிர்ப்பலைகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here