சீனா-ரஷ்யாவை இணைக்கும் வகையில் புதிய பாலம் திறப்பு

பீஜிங், ஜூன் 12:

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. இந்த போரை தொடங்கிய ரஷியா மீது உலகின் பல்வேறு வல்லரசு நாடுகள் வரலாறு காணாத அளவிற்கு கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இருப்பினும் தொடக்கம் முதல் ரஷ்யாவிற்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில் ரஷ்யா-சீனா இடையிலான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே பாலம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா-சீனா நாடுகளுக்கு இடையே ஆமூர் என்ற ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் 2014-ல் கையெழுத்தானது.

ரஷ்யாவின் பிலகோவேஷிசேன்ஸ்க் நகரையும், சீனாவின் வடக்கு மாகாணத்தில் ஹெய்ஹீ நகரயும் இணைக்கும் இப்பாலம் 2.2 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த பாலத்தை கட்டுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக, பாலம் திறக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் ரஷ்யா-சீனா இடையிலானா பாலம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் ரஷ்ய போக்குவரத்துத் துறை அமைச்சர் பங்கேற்றார்.

சீனா-ரஷ்யா இடையிலான அரசியல், பொருளாதார முன்னேற்றங்களுக்கு இந்த பாலம் உதவிகரமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here