அலுவலகத்தில் சரிந்து விழுந்த, மலாக்கா சிவில் தற்காப்புப் படையின் இயக்குநர் மரணம்

மலாக்கா, ஜூன் 14:

மலாக்கா சிவில் தற்காப்புப் படையின் (APM) இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் (PA) குத்பார்ட் ஜோண் மாட்டின் குவாட்ரா, அவரது அலுவலகத்தில் திடீரென சரிந்து விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.

அவர் தனது 47ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

சபாவின் கெனிங்காவைச் சேர்ந்த குத்பார்ட், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதாக மலாக்கா APM வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2021 முதல் மலாக்கா சிவில் தற்காப்புப் படையின் இயக்குநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, லெப்டினன்ட் கர்னல் குத்பர்ட் பினாங்கில் உள்ள ஏபிஎம்மில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவமனையால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவரது உடல் நல்லடக்கத்திற்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here