சமூக ஊடகங்களில் கஞ்சா பிஸ்கெட் விற்ற ஏழு பேர் கைது

சமூக ஊடகங்களின் வழி கஞ்சா பிஸ்கெட்டுகளை விற்ற ஏழு பேர் கெப்போங் Bandar Manjalara மற்றும் பத்து கேவ்ஸ் பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதன்கிழமையன்று 21 வயதுடைய சந்தேக நபர் பந்தர் மஞ்சராலா குடியிருப்பு ஒன்றில் கைது செய்யப்பட்டதாகவும் விசாரணையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டதாகவும் செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் பெஹ் எங் லாய் தெரிவித்தார். கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி உற்பத்தி செய்யப்பட்ட குக்கீகள், 230 கிராம் எடையுள்ள ஆறு துண்டுப் பொதியில் RM100க்கு விற்கப்பட்டதாக அவர் கூறினார்.

நாங்கள் அடுக்குமாடி குடியிருப்பினை சோதனை செய்தோம், அதில் ‘Happiness Begins with a Wonder Cake’ sticker,’ ஸ்டிக்கர் கொண்ட இரண்டு பாக்கெட்டுகளைக் கண்டுபிடித்தோம் என்று அவர் கூறினார்.

மொத்தம் 25 கிலோ கஞ்சா, 2.8 கிலோ எக்ஸ்டசி மாத்திரைகள், ரிங்கிட் 6,000 ரொக்கம், 5 நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்த மதிப்பு RM248,490 என்று அவர் கூறினார். ஏழு சந்தேக நபர்களில் மூன்று பேர் போதைப்பொருளுக்கு சாதகமாக சோதனை செய்தனர் மற்றும் ஏழு சந்தேக நபர்களில் நான்கு பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here