கோத்தா பாரு, ஜூன் 15 :
பொது நடவடிக்கைப் படையின் 8ஆவது பட்டாலியன் இன்று அதிகாலை கம்போங் கிஜாங், தானா மேரா அருகே, நடத்திய சோதனையில் தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் 80,000 வெள்ளி மதிப்புள்ள எட்டு அலங்கார வன மரங்களை கைப்பற்றியதுடன் அதை கொண்டு வந்த லோரி ஓட்டுநரையும் கைது செய்தனர்.
தென்கிழக்கு படைப்பிரிவு PGA கமாண்டர் டத்தோ ஹாசன் பஸ்ரி அஹ்மட் சஃபர் கூறுகையில் , அதிகாலை 2.30 மணியளவில் நடந்த சம்பவத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த PGA ஸ்டிரைக் ஃபோர்ஸ் உறுப்பினர்களின் குழு, சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந் ஒரு வோல்வோ லோரி கிராமத்திற்கு அருகே உள்ள சட்டவிரோத தளத்திலிருந்து வெளியே வருவதைக் கண்டது.
அதனித் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகளில், தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படும் பல அலங்கார வன மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் 39 வயதான ஓட்டுனநர் அம்மரங்களை ஜோகூருக்கு கொண்டு செல்ல பணியமர்த்தப்பட்டார்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஓட்டுநர் மற்றும் RM350,000 மதிப்புள்ள லோரி உட்பட அனைத்து பறிமுதல்களும் மேல் நடவடிக்கைக்காக லாலாங் பெபுயு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், தேசிய வனச்சட்டம் 1984 (திருத்தம் 1993) பிரிவு 84 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.