70 கெத்தும் நீர் பாக்கெட்டுகள் வைத்திருந்த லோரி ஓட்டுநர் கைது

மெர்சிங், ஜூன் 15 :

இங்குள்ள தாமான் வாவாசானில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் நடந்த சோதனையில், 70 கெத்தும் நீர் பாக்கெட்டுகள் வைத்திருந்த லோரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

அப்பிராந்திய கடல்சார் போலீஸ் படையின் தளபதி (2), துணை கமிஷனர் முகமட் ஜைலானி அப்துல்லா கூறுகையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 58, ஒரு வருடத்திற்கு முன்பு தனது வீட்டில் இருந்து இவ் வியாபாரத்தை செய்ததாக நம்பப்படுகிறது.

தமது துறைக்கு கிடைத்த பொது தகவலின் பேரில், இச்சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டது. சந்தேக நபராது ​​”வளாகத்தினுள் ஆய்வு செய்ததில்… மீன் பெட்டியில் பதப்படுத்தப்பட்ட கெத்தும் நீர் என சந்தேகிக்கப்படும் 70 பச்சை நிற நீர் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன,” என்று அவர் இன்று தெரிவித்தார்.

விஷம் சட்டம் 1952 (திருத்தம் 2003) பிரிவு 30 (3) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

“சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, அவருக்கு இதற்கு முன் எந்த குற்றப் பதிவும் இல்லை என்றும் அவர் காவல்துறையின் விசாரணைக்கு நன்றாக ஒத்துழைத்தார் என்றும் கூறினார்.

“இந்த வழக்கு மேல் நடவடிக்கைக்காக மெர்சிங் IPD மாவட்டத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here