Bon Odori விழா தொடர்பாக எங்களுக்கும் சிலாங்கூர் சுல்தானுக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை, என்கிறது பாஸ் கட்சி

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 16 :

நேற்று இஸ்தானா புக்கிட் காயங்கானில் சிலாங்கூர் சுல்தானுடன் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, ஜூலை 16 அன்று நடைபெறவிருந்த Bon Odori திருவிழா தொடர்பில் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷாவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சிலாங்கூர் பாஸ் தெரிவிதத்துள்ளது.

“நாங்கள் சுல்தானிடம் எங்களது நிலைப்பாட்டை கூறினோம், மிக முக்கியமாக, மக்களை ஒன்றிணைப்பதில் அரண்மனையின் முயற்சிக்கு நாங்கள் எல்லா வழிகளிலும் ஆதரவாக இருக்கிறோம் என்று அவரிடம் கூறினோம்.

Bon Odori திருவிழாவில் சிலாங்கூர் பாஸ் இன் நிலைப்பாட்டை மட்டுமே சுல்தான் தெரிந்து கொள்ள விரும்பியதாக கூறிய அவர், சிலாங்கூர் பாஸ் கட்சியின் நிலைப்பாட்டை சுல்தான் ஷராபுதீன் மதிப்பதாகவும் கூறினார்.

நேற்று சுல்தான் ஷராபுதீன், மாநில பாஸ் கட்சி தலைவர் அஹ்மட் யூனுஸ் ஹைரியை அழைத்து, இஸ்தானா புக்கிட் காயங்கானில் ஒரு சந்திப்பை நடத்தினார், அதன் பின்னரே பாஸ் கட்சி இக்கருத்தை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here