கோல திரெங்கானு, ஜூன் 19 :
கடந்த மே மாதம், 16 சட்டவிரோத குடியேறிகளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஈ-ஹெய்லிங் ஓட்டுநர்களுக்கு எதிராக இன்று கோல திரெங்கானு அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்ட சோய் சீ கியோவ், 57, வோங் கோக் சியோங், 48, மற்றும் லீ செங் பிங், 46, ஆகியோர், நீதிபதி தாசுகி அலி முன்நிலையில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, புரிந்துகொண்டதாக தலையசைத்தனர்.
இருப்பினும், நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூரைச் சேர்ந்த மூன்று குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றச்சாட்டின்படி, மூன்று வாகனங்களில் செல்லுபடியாகும் அடையாள ஆவணம் இல்லாமல், 16 முதல் 35 வயதுடைய, மொத்தம் 16 மியன்மார் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தியதாக மூவருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட மூவரும், கடந்த மே 22 ஆம் தேதி கம்போங் பத்து ராகிட் அருகே 34.5 ஆவது கிலோமீட்டரில், ஜாலான் கோல திரெங்கானு-கிளாந்தான் என்ற இடத்தில் சாலைத் தடுப்பை (SJR) கடந்து சென்றபோது, அவர்களது குற்றம் கண்டறியப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 34 உடன் இணைந்து வாசிக்கப்பட்ட நபர்கள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் 2007 (சட்டம் 670) பிரிவு 26J இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு RM250,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இவ்வழக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அமீர் அபுபக்கர் அப்துல்லாவினால் தொடரப்பட்டது.
இவ்வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் எதுவும் வழங்காததால், ஜூன் 26-ஆம் தேதியை மீண்டும் வழக்கு குறிப்பிடும் தேடியாக நீதிமன்றம் அறிவித்தது.