சட்டப்பூர்வ அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக வணிகர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூன் 20 :

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, செல்லுபடியாகும் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், பயன்படுத்திய தளபாடங்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவருக்கு எதிராக இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

46 வயதான லிம் கெங் ஹாங், என்ற குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், அவர் தான் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினார்.

பிப்ரவரி 14, 2016 அன்று காலை 10.30 மணியளவில், ஜாலான் ஈப்போவின் சுங்கை பத்து பாலத்தில் கருப்பு கைப்பிடியுடன் கூடிய தங்கத் துப்பாக்கியை வைத்திருந்ததாக, அவர் மீது துப்பாக்கிச் சூடு (கனமான அபராதம்) சட்டம் 1971 இன் பிரிவு 8 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆறு பிரம்படிகளை வழங்க வழிசெய்கிறது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 388 இன் விதிகளின்படி, இக்குற்றத்திற்கு ஜாமீன் அனுமதிக்கப்படவில்லை, இருந்தாலும் லிம்மிற்கு ஜாமீன் வழங்குமாறு அவரது தரப்பு வழக்கறிஞர் ரவீன் குமார் விண்ணப்பித்தார்.

“எனது கட்சிக்காரருக்கு 85 வயதான அவரது தாய் வீடில்லாமல் இருக்கிறார், மேலும் அவரது தாய் மற்றும் குழந்தையின் மருத்துவ செலவுகளையும் தனது கட்சிக்காரரே கவனித்துக்கொள்கிறார் என்றும் லிம்முக்கு இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளது, அவர் தினமும் மருந்து சாப்பிட வேண்டும், ” என்று கூறி அவர் ஜாமீனுக்கு விண்ணப்பித்தார்.

துணை அரசு வக்கீல் அப்துல் காலிக் நசெரி கூறுகையில், துப்பாக்கிச் சட்டத்தின் 12 (1) பிரிவு, குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஜாமீன் வழங்க அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் “குற்றம் சாட்டப்பட்டவர் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்படும் வரை இரண்டு முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. எனவே, இந்த காரணிகளால், குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் நீதிமன்றத்திடம் கூறினார்.

நீதிபதி டத்தோ நூர் அமான் முகமட் ஷூடி, லிம்மை ஜாமீனில் விடுவிக்க அனுமதிக்கவில்லை, அத்தோடு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காகவும் குறிப்பிடுவதற்கும் வழக்கை ஜூலை 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here