தடுப்பு காவலிலிருந்த கைதிகளுக்கு போதைப்பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்கியதாக நான்கு போலீசார் கைது

மலாக்கா, ஜூன் 22 :

மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் தடுப்பு காவலில் இருந்த கைதிகளுக்கு போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை விநியோகம் செய்ததாக நான்கு போலீஸ் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளனர்.

அவர்கள் மீது ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009 பிரிவு 16(a)(B)ன் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று மலாக்கா ஊழல் தடுப்பு ஆணைய இயக்குநர் முகமட் ஷஹரில் சே சாத் உறுதிப்படுத்தினார்.

குறித்த நான்கு போலீஸ் உறுப்பினர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 21) வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

2019 முதல் 2020 வரை கைதிகளுக்கு போதைப்பொருள் மற்றும் புகையிலை பொருட்கள் மற்றும் உணவுப் பொதிகள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களை வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அவர்கள் தங்கள் சேவைகளுக்கான தூண்டுதலாக RM600 முதல் RM9,000 வரை லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

நான்கு பேரும் புதன்கிழமை (ஜூன் 22) ஆயிர் கேரோவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர், அங்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மசானா சினின் அவர்களுக்கு எதிராக ஏழு நாள் காவல் உத்தரவு பிறப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here