தென்னை மரத்தில் சிக்கிய நிலையில் ஆடவர் சடலமாக மீட்பு

குவா மூசாங், ஜூன் 23 :

இங்குள்ள ஃபெல்டா அரிங்-1 இல் தென்னை மரத்தில் சிக்கி, ஒருவர் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.

47 வயதான ஜஹாருதின் ரம்லி, என்பவரே காலை 8.45 மணியளவில் 12 மீட்டர் உயரமான மரத்தில் சிக்கிக் கொண்டிருக்க காணப்பட்டார்.

குவா மூசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் அரிபுதீன் அகிஃப் முகமட் நூர் கூறுகையில், சம்பவம் குறித்து தமது துறைக்கு அழைப்பு வந்தது, “புகாரைப் பெற்றவுடன், அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் குழு அந்த இடத்திற்கு விரைந்தனர், தென்னை மரத்தில் மயக்கமடைந்த நிலையில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு நபரை அவர்கள் கண்டனர்,” என்று அவர் கூறினார்.

தீயணைப்பு மற்றும் மீட்பு உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவரின் உடலை மரத்திலிருந்து அகற்றி, கீழே கொண்டுவந்தனர், பின்னர் அவரது உடல் மேலதிக நடவடிக்கைக்காக மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“இருப்பினும், பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது, அவரது உடல் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், குவா மூசாங் மாவட்ட காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் சிக் சூன் ஃபூவை தொடர்பு கொண்டபோது, அவர் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here