அம்னோ உச்சமன்ற செயற்குழு உறுப்பினராக இஷாம் ஜலீல் நியமனம்

கோலாலம்பூர், ஜூன் 25 :

முன்னாள் சிலாங்கூர் பாரிசான் நேசனல் தகவல் தொடர்பு தலைவர் இஷாம் ஜலீல், நேற்று இரவு அம்னோ உச்சமன்ற செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் நீக்கப்பட்ட பாசீர் சாலாக் எம்பி டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மானுக்குப் பதிலாக இஷாம் நியமிக்கப்படுவார் என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.

” அம்னோ கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியால் நியமிக்கப்பட்ட இஷாம், இன்று பதவியேற்றார்,” என்று இரவு மெனாரா டத்தோ ஓனில் அஹ்மட் ஜாஹிட் தலைமையில் நடைபெற்ற அம்னோ உச்சமன்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

46 வயதான இஷாம், சிலாங்கூர் பிஎன் தகவல் தொடர்பு தலைவர் பதவியில் இருந்து முன்னதாக மாநில பிஎன் ஆல் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here