லாஹாட் டத்து, ஜூன் 26 :
இங்குள்ள லாடாங் சஹாபாத் 22ல் உள்ள தோட்டத் தொழிலாளி ஒருவர் நேற்று, இங்குள்ள பந்தாய் சுங்கை பிலிஸ் என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முதலை தாக்கியதில் உயிரிழந்தார்.
இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளான ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஆதாரங்களின்படி, பாதிக்கப்பட்டவர் பிலிப்பைன்ஸ் நாட்டவர் என்றும், அவர் மற்ற இரண்டு நண்பர்களுடன் மீன் பிடிக்க (அம்பு,வில்லை பயன்படுத்தி) வெளியே சென்றார்.
இருப்பினும், மீன் பிடிக்கும்போது பாதிக்கப்பட்டவர் முதலையால் தாக்கப்பட்டதாகவும், அது அவரை கடலை நோக்கி இழுத்துச் சென்றதாகவும் நம்பப்படுகிறது.
“இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள், உடனடியாக தஞ்சோங் லேபியானில் உள்ள பொது நடவடிக்கைப் படை உறுப்பினர்களிடம் புகார் அளித்தனர்.
“பிஜிஏ உறுப்பினர்கள் தஞ்சோங் லேபியான் கடற்கரையில் பாதிக்கப்பட்டவரை கண்டுபிடிக்க உதவினார்கள்,” என்று அவர் கூறினார்.
அவர் அளித்த தகவலின்படி, நள்ளிரவு 12 மணியளவில் கடலில் மிதந்த நிலையில் அந்த ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்.
பாதிக்கப்பட்டவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக லாஹாட் டத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.