கோலாலம்பூர், ஜூன் 29 :
போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் ஐக்கிய நாடுகளின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் அறிக்கையை வழங்குதற்காக, ஒரு வார கால உத்தியோகபூர்வ பணி பயணமாக இன்று புதன்கிழமை (ஜூன் 29) அமெரிக்காவின் நியூயார்க் நகரை சென்றடைந்தார்.
அவருடன் மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (மிரோஸ்) தலைவர் பேராசிரியர் வோங் ஷா யூன், நிலப் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த அமைச்சக அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர்.
“ சாலைப் பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகளின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டு, அங்கு நான் உறுப்பு நாடுகளின் அறிக்கையை வழங்குவேன்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில் கூறினார்.