கார் மோதியதில், 68 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி ..!

சிரம்பான், ஜூலை 1 :

நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் காரை ஓட்டிச் சென்றதாக நம்பப்படும் 21 வயது ஆடவர், அவருக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை மோதியதில், 68 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

கடந்த ஜூன் 29 அன்று, ஜாலான் சிரம்பானின் 5ஆவது கிலோமீட்டரில் இரவு 10.55 மணியளவில் நடந்த இந்த விபத்துக்குப் பிறகு, அந்த கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்ததாக போர்ட்டிக்சன் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் ஐடி ஷாம் முகமட் தெரிவித்தார்.

“சந்தேக நபர் லுகூட்டில் இருந்து போர்ட்டிக்சன் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து, அவருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் சவாரி செய்த பாதிக்கப்பட்டவர் மீது மோதியது.

“அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக நாங்கள் கருதுவதால், பாதிக்கப்பட்டவரின் இரத்த மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட 45 வினாடி வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. விபத்துக்கு பின் பல நபர்கள் கார் ஓட்டுநரை அவரது காரில் இருந்து வெளியே வரச் சொலவதைக் காணலாம், ஆனால் அவர் வெளியே வர மறுத்துவிட்டார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987ன் பிரிவு 44(1)ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஐடி ஷாம் மேலும் கூறினார்.

இவ்வழக்கு விசாரணையில் உள்ளதால், விபத்துக்கான காரணத்தை ஊகிக்கவோ அல்லது வீடியோவைப் பகிரவோ வேண்டாம் என்று அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here