கோலாலம்பூர்: காஜாங்கில் உள்ள தாமான் கஹாயா சுங்கை சுவாவில் உள்ள நீர்த்தேக்கக் குளத்தில் இன்று படகு கவிழ்ந்ததில் இரண்டு குடும்ப உறுப்பினர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) இயக்குநர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், பிற்பகல் 2.15 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு ஒரு துயர அழைப்பு வந்தது.
ஒரு ஆண் மற்றும் அவரது இரண்டு மகன்கள் அடங்கிய மூன்று நபர்கள் படகில் ஏறியதாக முதற்கட்ட தகவல் கிடைத்தது.
நீர் மீட்புக் குழு, 30 மீட்டர் ஆழத்தில் உள்ள நீர்த்தேக்கக் குளத்தில், 50 வயது மற்றும் 15 வயதான இரண்டு பாதிக்கப்பட்டவர்களை ‘கிராப்பிங் அயர்ன்’ நுட்பத்தைப் பயன்படுத்தி கண்காணித்து வருகிறது, என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மற்றொரு 18 வயது இளைஞன் நீந்திப் பாதுகாப்பாக. வந்ததாக நோராஸாம் கூறினார்.