கருக்கலைப்பு செய்துக்கொள்ளும் அமெரிக்க பெண்கள் மீது கைது நடவடிக்கை

வாஷிங்டன், ஜூலை 2 :

அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேபோல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.

இந்நிலையில், கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது.

இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டது. 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 24ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது’ என கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

அதேபோல், அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் பிற நாடுகளுக்கு சென்று கருக்கலைப்பு செய்துக்கொள்ளும் அமெரிக்க பெண்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சி மாநில கவர்னர்களுடன் கருக்கலைப்பு உரிமைகள் குறித்த மெய்நிகர் ஆலோசனையில் கூட்டத்தில் பங்கேற்றார் ஜோ பைடன். அதில் பேசிய அவர், “கைது போன்ற நடவடிக்கைகளை மக்கள் நம்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது நடக்கும், மேலும் இது ஒரு பெரிய ஒப்பந்தம் என்று முழு நாட்டிற்கும் அரசாணை அனுப்பப் போகிறோம். கருக்கலைப்பு செய்ய மாநில எல்லைகளைக் கடக்க வேண்டிய பெண்களைப் பாதுகாக்கவும், தடைசெய்யப்பட்ட மாநிலங்களில் மருந்துகளை பெறுவதற்கு அணுகுவதை உறுதிப்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து செயல்படும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here