பெண்ணையும் அவரது இரண்டு மாத ஆண் குழந்தையையும் கொலை செய்ததாக நம்பப்படும்ஆடவர், நிர்வாண நிலையில் போலீசாரால் கைது

ஜோகூர் பாரு, ஜூலை 4 :

பெர்மாஸ் ஜெயாவிலுள்ள ஒரு வீட்டில் ஒரு பெண்ணையும் அவரது இரண்டு மாத ஆண் குழந்தையையும் கொன்றதாக நம்பப்படும் ஒரு நபர், இன்று பிற்பகல் 2.45 மணியளவில் காவல்துறையினரால் நிர்வாண நிலையில் கைது செய்யப்பட்டார்.

ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறுகையில், சந்தேக நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கத்தி என்பவற்றையும் போலீசார் அவரிடமிருந்து கைப்பற்றினர் என்றார்.

26 வயதுடைய தாயும் அவரது 2 மாத ஆண் குழந்தையும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு கிடைத்த அறிக்கையை அடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், பகர் பத்து பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நண்பகல் 12.30 மணியளவில் கொலை நடந்ததாக நம்பப்படுகிறது.

“இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின்படி விசாரிக்கப்பட்டு வருகிறது, மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதற்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், 013-4472909 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, சமூக ஊடகங்களில் ஒரு நபர் நிர்வாணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்ற காணொளி பெரிதும் பகிரப்பட்டது.

சந்தேகநபர் குற்றத்தைச் செய்த பின்னர், அந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது என்று ரவூப் செலாமாட் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here